FD வட்டியை அதிகரித்த வங்கிகள்… ரிட்டர்ன் எவ்வளவு கிடைக்கும்னு இங்க பாருங்க!

Axis, PNB HFL, SBI hiked interest rates on fixed deposit investments Tamil News: நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. டெபாசிட் காலத்தைப் பொறுத்து எஃப்டிகளின் வட்டி விகிதங்களை 10 bps முதல் 25 bps வரை அதிகரித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜூன் 15, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும் இந்த புதிய விகிதங்கள் ரூ. 5 கோடி வரையிலான டெபாசிட்களுக்குப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஃப்டி விகிதங்களில் திருத்தம் செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் இப்போது கடன்களின் காலத்தைப் பொறுத்து 6 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வருமானத்தைப் பெறலாம்.

மூத்த குடிமக்களுக்கான PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் FD சலுகைகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) ஹவுசிங் ஃபைனான்ஸ், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களால் செய்யப்படும் நிலையான வைப்பு முதலீடுகளுக்கு அதிக 0.25 சதவீத வருவாயை தொடர்ந்து வழங்க இருக்கிறது.

FD வட்டி விகிதத்தை உயர்த்தும் ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி மற்ற கடன் வங்கிகளைப் பின்பற்றி நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. 2 கோடி வரையிலான நிலையான வைப்புகளுக்கு சமீபத்திய வட்டி விகிதங்கள் பொருந்தும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. 5 வருடங்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் FDகள் மீது பொது மக்களுக்கு 5.75 சதவிகிதம் அதிக வருமானத்தை வழங்குகிறது.

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் ஆக்சிஸ்

ஆக்சிஸ் வங்கி, ரூ.50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ரூ.50 லட்சம் மற்றும் ரூ.800 கோடிக்கும் குறைவாக உள்ள சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 3.50 சதவீத வருமானத்தை வங்கி வழங்குகிறது.

பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் எஸ்பிஐ

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) நிலையான வைப்புத்தொகைக்கான வருமானத்தை 20 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது. மீண்டும் வருமானம் வைப்புத் தொகையின் காலத்தைப் பொறுத்தது. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு புதிய விகிதங்கள் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.