MUST WATCH : 777 சார்லி படம் பார்த்து கதறி அழுத கர்நாடக முதல்வர் ; ஏன் தெரியுமா?

செல்லப்பிராணியான நாய்க்கும் அதனை வளர்க்கும் உரிமையாளருக்கும் இடையேயான பாசப்பிணைப்பை அத்தனை உணர்வுகளுடன் காட்சிப்படுத்தியிருக்கும் படமாக வெளியாகியிருக்கிறது ‘777 சார்லி’.

கன்னட திரைப்படமான இதில் அதில் முன்னணி நடிகர் ரஷித் ஷெட்டி நாயகனாக நடித்திருக்கிறார். கிரண் ராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கடந்த ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியான 777 சார்லி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 777 சார்லி படத்தை நேற்று திரையரங்குக்கு சென்று பார்த்திருக்கிறார்.

image

படத்தை பார்த்துவிட்டு அழுதபடியே அவர் வந்திருக்கிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, “அனைவரும் பார்க்கவேண்டிய படம். படத்தில் நடித்திருக்கும் நாய் கண்ணாலேயே தனது உணர்வுகளை கடத்தியிருக்கிறது.

ஏற்கெனவே நாய்களை பற்றிய படங்கள் அதிகமாக வந்திருந்தாலும் இந்த படம் அதன் உணர்ச்சிகளை காட்டுகிறது. நாய்களின் அன்பு நிபந்தனையற்றது. தூய்மையானது.” என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். 

பசவராஜ் பொம்மை பேசிய காணொலியை காண: இங்கே க்ளிக் செய்யவும்

படம் பார்க்கும் போதும் அவர் அழதபடி இருந்த படமும், அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

முன்னதாக, கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்பதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தன்று அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான Snooby என்ற நாய் இறந்திருக்கிறது. அதன் இறுதிச்சடங்கின் போது ஸ்னூபியின் மீது படுத்து பசவராஜ் கதறி அழுத புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

image

777 சார்லி படத்தை பார்த்த மங்களூரு காவல்துறையினர் தங்களது போலீஸ் மோப்ப நாய்க்கு சார்லி என பெயரிட்டிருக்கிறார்கள். மேலும் இந்த படம் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.