”#StopAdani".. இலங்கை அரசியலில் புயலை கிளப்பிய அதானி திட்டம்.. மவுனம் காக்கும் இந்திய அரசு

பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவித்து வரும் இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் இன்னும் ஓய்ந்தப்பாடில்லை. தற்போது இலங்கையின் போட்டியில் இந்தியா குறித்த விவாதமும் சூடுபிடித்துள்ளது. அதானி நிறுவனத்திற்கு எதிரான ஹேஷ்டேக் இலங்கையில் ட்ரெண்ட் ஆகியுள்ளது அதன் உச்சத்தை காட்டுகிறது. நடந்தது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
இலங்கை நாடாளுமன்ற குழு முன்பு அந்நாட்டின் மின் வாரியத் தலைவர் பெர்டினான்டோ சொன்ன வார்த்தைகளில் இருந்துதான் இந்த பூகம்பம் கிளம்பியது. ‘இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றாலை திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு நேரடியாக வழங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அழுத்தம் தந்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்ச என்னிடம் கூறினார்’ என்று பெர்டினான்டோ சொன்ன அடுத்த நொடியில் இருந்து இந்த விவகாரம் இலங்கை அரசியலில் நெருப்பாய் பற்றிக் கொண்டது. அடுத்த சில மணி நேரங்களில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறின.
பெர்டினான்டோவின் கருத்தை கோத்தபய ராஜபக்ச உடனடியாக மறுத்து ட்விட்டரில் பதிவிட்டார். இருப்பினும் சர்ச்சை வெடித்துவிட்டது. இதுகுறித்த விவாதம் தீயாய் பரவியது. கடந்த ஜூன் 10 ஆம் தேதி இந்த கருத்தினை கூறியிருந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெர்டினான்டோ பல்டி அடித்துவிட்டார். அழுத்தம் அதிகரிக்கவே, பெர்டினான்டோ தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு, மனஅழுத்தம் காரணமாக பொய் கூறிவிட்டதாக வருத்தமும் தெரிவித்தார்.
image
இத்தோடு அது முடியவில்லை, மின்வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பெர்டினான்டோ. சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக விளக்கமும் கொடுத்தார். இத்துடன் இந்த பிரச்னை முடிவுக்கு வரும் என நிலைத்தால், ஏற்கனவே போராட்ட மனநிலையில் இருக்கும் மக்கள் மத்தியில் அதானி காற்றாலை திட்ட விவகாரமும் கோபத்தை மூட்டியுள்ளது.
இதனால், ”#StopAdani” என்ற ஹேஷ்டேக் இலங்கையில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதாவது அதானி குழுமத்திற்கு எதிராக நாளை (ஜூன் 16 மாபெரும் போராட்டத்திற்கு சமூக வலைதளக்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்புவில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் மதியம் 2 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய அரசு இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் குரோனியிஷம் கடல் தாண்டி இலங்கை நாட்டிலும் நுழைந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனங்களை முன் வைத்து இருந்தார்.
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>BJP’s cronyism has now crossed Palk Strait and moved into Sri Lanka. <a href=”https://t.co/Uy2w6szHNP”>pic.twitter.com/Uy2w6szHNP</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href=”https://twitter.com/RahulGandhi/status/1535960452387074048?ref_src=twsrc%5Etfw”>June 12, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.