Xiaomi Battery Replacement Program: சியோமி இந்தியா, இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஒரு பேட்டரி மாற்றும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் போனின் பேட்டரியை மலிவு விலையில் மாற்றிக்கொள்ளலாம்.
இதன் மூலம் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.499 செலுத்தி போனின் பேட்டரியை மாற்றிக்கொள்ள முடியும். நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த திட்டத்தைப் பெற வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள சியோமி சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும்.
போனின் பேட்டரியை மாற்ற வேண்டுமானால் 499 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். பேட்டரி மாற்றும் திட்டம் சியோமி, மி, ரெட்மி ஆகிய போன் மாடல்களுக்குப் பொருந்தும்.
JioPhone: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி… ஜியோ போன் ரீசார்ஜ் விலை உயர்வு!
இருப்பினும், இது பேட்டரி மாற்றத்திற்கான ஆரம்ப கட்டணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மொபைலின் மாடலைப் பொறுத்து, பேட்டரியின் விலை அதிகரிக்கலாம்.
உங்கள் பேட்டரியின் நிலை என்ன?
வாடிக்கையாளர்கள் சியோமி சர்வீஸ் பிளஸ் (Xiaomi Service Plus) செயலிக்குச் சென்று சேவை மையத்திற்கான சந்திப்பை பதிவு செய்யலாம். மேலும், உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி மாற்றும் நிலைக்கு வந்து விட்டதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
iPhone 14 Max Leaks: விடைபெறும் ஐபோன் 13 மினி… தடம்பதிக்கும் ஐபோன் 14 மேக்ஸ்!
பேட்டரி மிகவும் மெதுவாக சார்ஜ் ஆனாலோ, சார்ஜ் அல்லது பயன்படுத்தும் போது அதிகளவு சூடானாலோ பேட்டரியை உடனடியாக மாற்ற வேண்டும். மேலும், நிறுவனத்தின் பேட்டரி மாற்றுத் திட்டம், வாடிக்கையாளர்கள் உள்ளூர் கடைகளுக்குச் சென்று ஸ்மார்ட்போனை பழுதுபார்க்கும் தேவையை நீக்குகிறது.
Nothing: நம்ம தமிழ்நாட்டில் தயாராகும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்!
வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவை மையத்திற்குச் சென்று போனின் பேட்டரியை மாற்றினால், உங்கள் பழைய போன் புதியது போன்று மாறிவிடும்.
அப்டேட்டுகளை நிறுத்திய சியோமி
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு, சியோமி ஒரே நேரத்தில்
70 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை
வெளியிட்டு அதிர்ச்சியளித்தது. அதாவது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இனி எந்த இயங்குதள அப்டேட்டுகளும் வழங்கப்படாது என்று அந்த அறிவிப்பில் இருந்தது.
பட்டியலில் Redmi Note 7, Redmi K20, Redmi 7, Mi 9 SE போன்ற 70 ஸ்மார்ட்போன்கள் உள்ளன. சுருக்கமாக, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவின் முடிவை (EOS) அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
இருப்பினும், சில பிரீமியம் ஃபோன்கள் பாதுகாப்பு மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகளை இன்னும் நீண்ட காலத்திற்குப் பெறுகின்றன. உங்கள் சியோமி போனும் இந்தப் பட்டியலில் இருந்தால், உடனடியாக அதை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.