வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தில் பல ஆபத்துகள் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அக்னிபத் திட்டம் சர்ச்சைக்குரியது. பல ஆபத்துகளை கொண்டுள்ளது. ஆயுதப்படைகளின் நீண்ட கால மரபுகள் மற்றும் நெறிமுறைகளை தகர்க்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு நாட்டை பாதுகாக்க உற்சாகம் அளிக்கப்படும் என்பதற்கும், சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதம் இல்லை.
இந்த திட்டம் குறித்து, ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை வீரர்களின் கருத்துகளை நாங்கள் கேட்டுள்ளோம். படித்துள்ளோம். அதில், அவர்கள் ஒரு மித்த கருத்தாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பணியில் உள்ளவர்களும், அதே கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ஆலோசிக்க வேண்டும். அவசரகதியில் அமல்படுத்தப்படும் அக்னிபத் திட்டத்தால் ஏற்படும் விளைவு குறித்து எச்சரிப்பது நமது கடமை. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
Advertisement