மத்திய அரசு அண்மையில் அறிவித்த 4 ஆண்டுகால ஒப்பந்த ராணுவ பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் பல இடங்களில் இளைஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைகளில் டயர்களை கொளுத்தியும், ஊர்வலமாக சென்றும் அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது.
கஷ்டப்பட்டு ராணுவத்தில் சேர்ந்து, பயிற்சி முடித்து, பின்னர் 4 ஆண்டுகாலத்திற்கு பிறகு பணியிலிருந்து விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், 3 ஆண்டுகாலத்தில் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறினர்.
ஏற்கனவே உள்ள தேர்வு முறையே தொடரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.