அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது.
சில தினங்களுக்கு முன் பெய்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், கவுகாத்தியில் நேற்று பெய்த கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள், கட்டடங்கள் நீரில் தத்தளிக்கின்றன.
துமுல்பூர், திமா ஹாசோ மாவட்டங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.