அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமையை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனிடையே தமிழகம் முழுவதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க கோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனியே ஆலோசனை நடத்தினர். ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தர். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரும் பொதுச்செயலாளராக கட்சியின் சட்டத்தில் இடமில்லை என தெரிவித்துள்ளார்.