அரியானாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் விரட்டினர்.
ராணுவத்திற்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வடமாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அரியானா மாநிலம் பல்வால் பகுதியில் துணை ஆணையர் வீட்டின் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலைத்னர்.
கற்கள் தாக்கியதில் சில காவலர்கள் காயம் அடைந்தனர் என்றும், 4 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.