மர்ம விமானம் ஒன்று நேட்டோ நாடுகளான ஹங்கேரி, ரோமானியா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செர்பியா வான்வெளியில் அத்துமீறியதை அடுத்து பல்கேரியாவில் தரையிறங்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் மட்டும் பயணப்படும் குறித்த விமானத்தை ஹங்கேரிய மற்றும் ரோமானிய விமானப்படைகள் முதலில் அடையாளம் கண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், மர்ம விமானம் லிதுவேனியாவில் இருந்து புறப்பட்டு பல்கேரியாவின் டார்கோவிஷ்டே என்ற இடத்தில் கைவிடப்பட்ட விமானநிலையத்தில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது.
இதனிடையே, குறித்த மர்ம விமானத்தை நேட்டோ நாடுகளான ஹங்கேரி, ரோமானியா விமானப்படை விமானங்கள் சுற்றிவளைக்க முயன்றதாகவும், ஆனால் அந்த மர்ம விமானத்துடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
மேலும், ஹங்கேரியில் உள்ள குட்டி விமான நிலையத்தில் தரையிறங்கி, எரிபொருள் நிரப்பிய பின்னர் மீண்டும் பயணப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பொலிசார் சம்பவயிடத்திற்கு சென்று சேரும் முன்னர் அவர்கள் விமானத்துடன் தப்பியதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே தர்கோவிஷ்டே விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானி மற்றும் ஊழியர்கள் மாயமான பிறகு என்ன நடந்தது என்பது குறித்து பல்கேரிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அந்த மர்ம விமானம் தரையிறங்கிய விமான நிலையமானது, சமீப ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை எனவும், தற்போது வேளாண் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், பல்கேரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி Dragomir Zakov தெரிவிக்கையில், ஜூன் 8ம் திகதி மாலை தங்களது நாட்டின் வான்வெளியில் குறித்த மர்ம விமானம் நுழைந்ததாக கூறியுள்ளார்.
ஆனால் பொதுமக்களுக்கும் இராணுவ முகாம்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என பல்கேரியா அரசு தெரிவித்துள்ளது.