அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவர்கள் நமது மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். நாகரிகமான மொழியில் பகிரப்படும் அரசியல் மீம்ஸ்கள் கட்சி பேதம் கொள்கைகளைத் தாண்டி கவனத்தைப் பெறும். இன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற மீம்ஸ்களை தொகுத்து இங்கே தருகிறோம்.
பாக்டீரியா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், #டவுட்டு என்று கேள்வி எழுப்பி, “வாத்தி: பசங்களா நா நடத்துன ராமாயண புரானத்துல எதாவது டவுட் இருந்தா கேளுங்க…
குட்டி மீ: 16 வருஷம் காட்டுல இருந்த ராமனுக்கு ஷேவ் செஞ்சது யாரு சார்?
வாத்தி: நீயெல்லாம் மனுஷனே இல தெரியுமா?” என்று கிண்டல் மீம்ஸ் பகிர்ந்துள்ளார்.
எனக்கொரு டவுட்டு!? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் – ஓபிஎஸ் # இன்னும் ஏன்டா அமைதியா இருக்கீங்கன்னு கேட்குறாரோ!?” என்று வடிவேலு மீம்ஸ் பதிவிட்டு கலாய்த்துள்ளார்.
டீச்சர் மாணவனிடம் சாதி பற்றி பேசியது குறித்தும் பின்னர் அந்த மாணவன் ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது குறித்தும், ஜோ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “டீச்சர் ~ நா நாடாரு, நீ தேவரு. நாம யாருன்னு அவங்களுக்கு காட்ட வேண்டாமா?
தட் ஸ்டூடண்ட் ~ அதுக்கு முன்னாடி நா யாருன்னு உனக்கு காட்டுறேன். இருடியேய்,ரெக்கார்ட் பண்ணி போட்டு விடுறேன்.” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
நாகர்கோயில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி, “பிற மதத்தைச் சார்ந்த அமைச்சர்களை கோயில் நிகழ்ச்சிகளில் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியதற்கு, “அப்டின்னா ஹிந்துஸ் தவிர வேறயாரும் எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்னு சொல்லுங்க. அப்புறமா கோயிலுக்கு போராட்டாம் பண்ணலாம்.” என்று மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “நாற்காலி ” தயாராக ” இருந்தும் அதை வேண்டாம்
என்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என்று அண்ணாமலை கூறியதற்கு “உன்னை…
கேட்டேனா அண்ணாமலை..!!!?” என்று ரஜினி படத்தின் மீம்ஸ் போட்டு கேள்வி கேட்டுள்ளார்.
நெல்லை அண்ணாச்சி மற்றொரு மீம்ஸில், “பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
காரணம் என்ன…??? வேற யாரு…நேரு தான்..!!!” என்று கிண்டல் செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்துள்ள நிலையில், ஓ.பி.எஸ் ஆதாரவாளர்கள் போஸ்டர் ஒட்டியும், முழக்கமிட்டும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இதையடுத்து, ஓ.பி.எஸ் அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியது குறித்து நெல்லை அண்ணாச்சி மற்றொரு மீம்ஸில், “தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்! என்று ஓ.பி.எஸ் கூறியதற்கு, ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறாரு…” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “விஜய பிரபாகரனுக்கு கட்சி பொறுப்பு வழங்குவது குறித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவெடுப்பார் : பிரேமலதா விஜயகாந்த்
அப்படியா? சரி அவர் என்ன முடிவு எடுப்பார்ன்றதை யாரு முடிவு செய்வாங்க..?
அது நான் தான் எடுப்பேன்” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? பயனர் மற்றொரு மீம்ஸில், “100 கிமீ வேகத்தில் ரயில் வருவது தெரிந்தே தண்டவாளத்தில் நடக்கின்றனர் – மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி
காலங்காலமா காலைக்கடன் கழிச்சுட்டு இருந்த தண்டவாளத்துல திடீர்னு நீ டிரெய்ன் ஓட்டுனா எப்படி..? அவன் மெதுவாத்தான் வருவான் மெதுவாத்தேன் வருவான்..” என்று தண்டவாளங்களில் கழிப்பவர்கள் திருந்தாதது குறித்து கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் விக்ரம் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் உள்ளிட்ட பலரையும் பார்த்து வரும் நிலையில், “விக்ரம் வெற்றிக்கப்புறம் ஆண்டவர் இன்னும் யார் யாரையெல்லாம் போய் பார்க்கல..? ரமேஷ் அப்பாவையும் சுரேஷ் அப்பாவையும்..” என்று கிண்டல் செய்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற ட்விட்டர் பயனர், “ஓபிஎஸ் ஈபிஎஸ், நீங்க ரெண்டு பேரும் ஏன் ஒரு ஆபரேசன் பண்ணி ஒர் உடல் ஈருயிர் ஆக கூடாது..?” என்று மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”