மும்பை: இந்தி படத்தில் கவுரவ வேடத்தில் சூர்யா நடிக்கிறார்.சுகா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்த படம் சூரரைப் போற்று. இந்த படத்தை சூர்யா இந்தியில் தயாரித்து வருகிறார். அக்ஷய்குமார் நடிக்கிறார். சுதா கொங்கரா இந்தியிலும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவும் நடிப்பார் என படப்பிடிப்பு தொடங்கியது முதலே கூறப்பட்டு வந்தது. அது உண்மைதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. டிவிட்டரில், அக்ஷய்குமாருடன் விமானம் அருகே சூர்யா படுத்திருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில், ‘இந்தியிலும் படம் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. அக்ஷய்குமாரின் நடிப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சுதா கொங்கரா திறம்பட இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறேன்’ என சூர்யா தெரிவித்துள்ளார்.