கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களின் அனுப்பப்படும் அந்நிய செலாவணி தொகை இவ்வாறு அதிகரித்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் பதிவான 249 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி மே மாதத்தில் 304 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், முகவர் நிலையங்கள் ஊடாக 47 ஆயிரத்து 692 பேரும், சுயமாக 85 ஆயிரத்து 550 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.
அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், ஆயிரத்து 640 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவற்றில், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், ஆயிரத்து 853 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.