கனடாவின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ட்ரெவர் கேடியூ(Trevor Cadieu) மீது இராணுவ பொலிசார் இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் கனேடிய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார் Trevor Cadieu.
தொடர்ந்து, உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரும் என்றே இராணுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜெனரல் ட்ரெவர் கேடியூ மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு தொடர்புடைய துஸ்பிரயோக சம்பவம் 1994ல் ஒன்ராறியோவில் அமைந்துள்ள ராயல் இராணுவ கல்லூரியில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், தவறேதும் இழைக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் கனேடிய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்கவிருந்த நிலையில், இராணுவ பொலிசார் விசாரணையை முன்னெடுத்ததை அடுத்து, ராணுவ தளபதியாக அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து ஏப்ரல் தொடக்கத்தில் ஓய்வு பெற்ற அவர், அதன் பிறகு உக்ரைன் இராணுவத்திற்கு உதவும் பொருட்டு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.