உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு திடீர் உடல் நலக்குறைவு

புதுடெல்லி:  இமாச்சல பிரதேசத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஷாவுக்கு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஷா. இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலம் பாதித்து. இதயம் கனமாகி மாரடைப்பு ஏற்பட்டது போல் அசவுகரியமாக உணர்ந்துள்ளார். உடனே, விமானம் மூலமாக அவர் டெல்லி அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரமணா அவருடன் தொடர்பில் இருந்து வருகிறார். மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகம்தான் அவரை தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரத்துக்குப் பிறகு, நீதிபதி ஷாவின் உடல்நிலை சீரானது. பின்னர் அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘கடவுள் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். யாரும் கவலைப்பட தேவையில்லை. நான் டெல்லி வந்து விட்டேன். நீங்கள் என்னை பார்க்கலாம்’ என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.