அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அரிசி ஆலைகள் மற்றும் பாரிய நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் எதிர்காலத்தில் உணவுப்பொருட்களை சேமித்து வைப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றும் என்றும் பிரதமர் கூறினார்.
வங்கிகள் கோரிய கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி வைக்கப்படுவதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, பிரதமரிடம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளுக்கு இணங்க, இலங்கை வங்கி கடன்களை வழங்குவதை உறுதிசெய்து, வங்கிகளின் கடன் கொள்கைகளை கண்காணிக்குமாறு மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.