கணவரும் அவரது பெற்றோரும் தன்னை சாதி ரீதியாக கொடுமைப்படுத்துவதாக மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப் பிரதேச போலீஸாரிடம் புகாரளித்துள்ளார்.
மீரட்டின் மவானா காவல்நிலைய எல்லைக்குட்பட்டது நிலோஹா கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த பபிதா என்ற பெண்தான் போலீசிடம் கணவர் மற்றும் அவரது பெற்றோர் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
அதில், “தன்னை நன்றாக பார்த்துக்கொள்வதாகவும், தன்னை காதலிப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து கணவர் என்னை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகுதான் தெரிந்தது அவருக்கு ஏற்கெனவே 2 முறை திருமணமாகி இருக்கிறது.
அதனை நான் ஏற்க மறுத்தேன். இதனால் கணவரும், அவரது பெற்றோரும் என்னை உடல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தாக்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அவர்களை விட்டு தனியே வாழ்ந்து வருகிறேன்.
தனியாக வாழ்ந்து வந்தாலும் என் மீதான தாக்குதலை அவர்கள் நிறுத்தியபாடில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் காவல்துறை தரப்பிலும் பபிதாவின் புகார் மீது முறையான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என அவர் குற்றஞ்சாட்டியதை ஹிந்தி டெய்லி ஹிந்துஸ்தான் செய்தி மூலம் அறிய முடிகிறது.
ALSO READ:
அரசு மருத்துவமனையில் இரு குடும்பங்கள் பயங்கர இடையே மோதல்: வீடியோ வெளியீடுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM