உலகின் ரொம்ப காஸ்ட்லியான 15 நகரங்கள் எது.. ஏன்..?

ஷாங்காய் மற்றும் ஹாங்காங் போன்ற உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் வாழும் பெரும் பணக்காரர்களுக்கு, பணவீக்கம் காரணமாக கடந்த ஆண்டு ஆடம்பர பொருட்களின் விலைகளை அவர்களின் வாங்கும் திறனை குறைத்தது.

மறுபுறம் லண்டன் மற்றும் நியூயார்க்கில் வசிக்கும் பணக்காரர்களுக்கு, டிசைனர் ஹேண்ட்பேக்குகள், ஷீக்கள், சூட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் அவர்களின் பணவீக்க விகிதங்களுடன் இருக்கவில்லை.

இதற்கிடையில் குடியிருப்பு விலைகள், கார்கள், விமான கட்டணம், வணிக பள்ளிகள் மற்றும் பிற செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, கீழ்கண்ட இந்த விலையுயர்ந்த நகரங்களை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

லிஸ்ட் இதோ?

ஷாங்காய்
லண்டன்
தைபே
ஹாங்காங்
சிங்கப்பூர்
மொனாக்கோ
சூரிச்
டோக்கியோ
சிட்னி
பாரிஸ்
நியூயார்க்
சாவ் பாலோ
மிலன்
துபாய்
பாங்காக்

பணவீக்கம் பெரும் பிரச்சனை

பணவீக்கம் பெரும் பிரச்சனை

பணக்காரர்களும் பணவீக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவில்லை. இது அமெரிக்காவில் 8.6% ஆகவும், இங்கிலாந்தில் 9% -த்தினையும் எட்டியுள்ளது. சாமானிய மக்களை விட பணக்காரர்கள் இதனை தாங்கிக் கொள்ள முடிந்தாலும் கூட, தனி நபர் விகிதாச்சரத்திலும் பங்குகளை வைத்திருக்க வாய்ப்புகள் உள்ளது. ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் குறியீட்டின் படி, உலகின் 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 1.4 டிரில்லியன் டாலர் சரிவினைக் கண்டுள்ளது.

சாதாரணமாக செலவு செய்யும் செல்வந்தர்கள்?
 

சாதாரணமாக செலவு செய்யும் செல்வந்தர்கள்?

செல்வந்தர்கள் தற்போது சாதாரணமாக செலவு செய்கிறார்கள் என்கிறது ஒரு அறிக்கை. லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் 41% அதிகரித்துள்ளது. இது கொரோனாவின் வருகைக்கு பிறகு வீட்டில் இருந்து பணி புரிதல் மற்றும் சிப் பற்றாக்குறை காரணமாக தூண்டப்பட்டது. ஒரு பைக் விலை 30% அதிகரித்துள்ளது. மது வகைகள் 26% விலை அதிகரித்துள்ளது. ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துமது 33% சம்பளம் அதிகரித்துள்ளது.

சவால்கள்

சவால்கள்

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், கொரோனா பெருந்தொற்றும் அச்சுறுத்தி வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா பிரச்சனையும் மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டியுள்ளது. இது மக்களின் வாங்கும் திறனை குறைத்துள்ளது. இது நீண்டகாலத்திற்கு மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

ஷாங்காய்

ஷாங்காய்

சீனாவின் மிகப்பெரிய நகரமான இது, உலகின் ஃபைனான்ஷியல் ஹப் என்று அழைக்கப்படும் நகரங்களில் ஒன்று. இது உலகின் மிக அதிகமான விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாகும். இது பணக்காரர்கள் அதிகம் வாழும் ஒரு நகரமாகும். இது சொகுசு பொருட்களின் விலை அதிகரிப்பு, பணவீக்கம் அதிகப்பு காரணமாக மக்களின் வாங்கும் திறன் என்பது குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன்

லண்டன்

இங்கிலாந்தின் தலை நகரமான லண்டன் உலகின் காஸ்ட்லியான நகரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகரமாக உள்ளது. இங்கும் சொகுசு பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில், மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது.

தைபே

தைபே

தாய்வானின் தலை நகரமான தைபே மூன்றாவது இடத்தில் உள்ளது. தைவானின் பொருளாதார மையமாக உள்ள தைபே, கலாச்சார மையங்களில் ஒன்றாகவும் உள்ளது. மொத்தத்தில் மக்கள் அதிகம் விரும்பும் ஒரு நகரமாக உள்ளது.

ஹாங்காங்

ஹாங்காங்

ஹாங்காங் நகரம் 4வது இடத்தியோல் உள்ள ஒரு நகரமாகும். இங்கு மக்களின் வாழ்க்கை தரம், லைப்ஸ்டைல், விலை விகிதாச்சாரம் என அனைத்தும் அடிப்படையியோல் கொண்டுள்ளது. இது தவிர வீட்டின் விலை, கார்கள், விமான போக்குவரத்து, வணிக பள்ளிகள் என பலவும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

மிக கஸ்ட்லியான நகரங்களில் 5வது இடத்தினை பிடித்துள்ள நகரம் சிங்கப்பூர் ஆகும். தொடர்ந்து பல ஆண்டுகளாக காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் இருந்து வருகின்றது. இங்கு உணவு பொருட்கள் விலை, வாடகை கட்டணம் அதிகரிப்பு என பலவும் அதிகம்.

மொனாகோ

மொனாகோ

ஐரோப்பிய நகரமான மொனாகோ உலகின் ஆறாவது நகரமாகும். சுற்றுலாவையே முக்கியமாக வணிகமாக கொண்டுள்ள நகரங்களில் மொனகோ ஒன்று. பழமையான நகரங்களில் ஒன்று.

 சூரிச்

சூரிச்

சுவிட்சர்லான்ய்ஹில் இள்ள சூரிச், ஐரோப்பிபாவில் உள்ள காஸ்ட்லியான நகரங்களில் ஒன்று. இந்த சூரிச் நகரை சுற்றி பார்க்க மட்டும் பெரும் தொல்கை செலவழிக்க வேண்டும். இந்த நகரத்தில் ஒட்டுமொத்த தங்குமிடம், உணவு, போக்குபரத்து என ஒட்டுமொத்த செலவும் அதிகமாக இருந்தது.

டோக்கியோ

டோக்கியோ

ஜப்பானை சேர்ந்த டோக்கியோ, 8வது இடத்தில் உள்ள காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாகும். இது உலகின் விலை உயர்ந்த நகரங்களில் ஒன்றாகும். இது பழமை மற்றும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப உள்ள நகரங்களில் ஒன்றாகும்.

சிட்னி

சிட்னி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் 9வது காஸ்ட்லியான நகரமாகும். இந்த பட்டியலில் ரஷ்யாவின் மாஸ்கோ நீக்கப்பட்டுள்ளது.

பாரிஸ்

பாரிஸ்

பிரான்சின் பாரிஸ் நகரம் காதலர்களுக்கு பிடித்தமான நகரங்களில் ஒன்றாகும். ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவது, இன்னும் விலைவாசியினை தூண்டுகின்றது. இங்குள்ள உணவகங்கள், காபி, சாக்லேட்கள், பேஸ்ட்ரிகள், ஓயின் ஆகியவை உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Which are the 15 most expensive cities in the world and why?

These expensive cities are listed below, taking into account residential prices, cars, airfare, business schools and other expenses.

Story first published: Thursday, June 16, 2022, 14:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.