புதுடில்லி: நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி உத்தர பிரதேசம் உள்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையாளர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. சட்டவிரோதமான முறையில் வீடு கட்டியதால் கட்டடம் இடித்து தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்னும் இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பழிவாங்கும் நடவடிக்கையாக இல்லாமல், உரிய சட்ட விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், வீடுகள் இடிப்பை எதிர்த்த வழக்கில் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உ.பி., அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி: நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி உத்தர பிரதேசம் உள்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் கைது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.