ஒற்றைத் தலைமை தீர்மானம்: ஒப்புதல் கேட்டு ஓ.பி.எஸ் இடம் சமரசம் பேசிய இ.பி.எஸ் முகாம்

ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்து அதிமுகவில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஒற்றைத் தலைமையாக அதிமுக பொதுச் செயலாலர் பதவியைக் கைப்பற்ற ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவர ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் இடம் இ.பி.எஸ் முகாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து இரட்டைத் தலைமையாக இருந்து வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நிர்வாகிகள் அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி குரல் எழுப்பினர். இதனால், அதிமுகவில் ஒற்றைத் தலைமை யார் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே போட்டி எழுந்தது. வருகிற 23 ஆம் தேதி பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பதவிக்கு ஓ.பி.எஸ்-தான் தகுதியானவர் என்று போஸ்டர்களை ஒட்டி ஆதரவை வெளிப்படுத்தினர். ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்-க்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால், அதிமுகவுக்குள் பெரிய மோதல் தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி கே.பழனிசாமி முகாம் அழுத்தம் கொடுத்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற சம்மதிக்க வைத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“பன்னீர்செல்வத்திற்கு தலைமைக் கழகத் தலைவர் மற்றும் வழிநடத்தல் குழுத் தலைவர் பதவியை வழங்கவும், ஜெ.ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை நியமிக்கவும் இ.பி.எஸ் குழு திட்டமிட்டுள்ளது. ஓ.பி.எஸ் உடன் பேச்சுவார்த்தை தொடரும் அதிமுக வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தை முடக்க ஓ.பி.எஸ் அணியினர் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ.பி.எஸ் முகாமில் தொடர்ந்து அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என அழுத்தம் கொடுத்து, ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற சம்மதிக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சி செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் ஆத்திரமடைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி தங்கள் ஆதரவி வெளிப்படுத்தினர். அந்த போஸ்டர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்ததைக் கண்டித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் அருகே அவருடைய ஆதரவாளர்கள் சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓபி.எஸ் அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தார்.

இ.பி.எஸ் விசுவாசிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர். பி. உதயகுமார் ஆகியோர் புதன்கிழமை ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்தனர்.

“ஜெயலலிதா வகித்து வந்த தலைமைக் கழகத் தலைவர் மற்றும் வழிநடத்தல் குழுத் தலைவர் பதவியை ஓபிஎஸ்ஸுக்கும், பொதுச் செயலாளர் பதவியை பழனிசாமிக்கும் வழங்க இபிஎஸ் குழு திட்டமிட்டுள்ளது. ஓபிஎஸ்ஸுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை தொடரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலகப் பொறுப்பாளர்களின் பெரும் பகுதியினரின் ஆதரவால் உற்சாகமடைந்த இபிஎஸ் முகாம், பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்கள், கட்சியை ஒற்றைத் தலைமை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். “கட்சிக்கும் நிர்வாகத்துக்கும் ஒற்றைத் தலைமைதான் நல்லது. இரட்டைத் தலைமையைப் போல முடிவெடுப்பதில் எந்தக் குழப்பமும் இருக்காது. ஓ.பி.எஸ் உடன் பேசி வருகிறோம், அது இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளன” என்று திண்டுக்கல் சீனிவாசன் ஊடகங்களிடம் கூறினார். மேலும், அவர் இ.பி.எஸ்-க்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார்.

அதிமுக அமைப்புத் தேர்தலுக்குப் பிறகு, முதன்மை உறுப்பினர்களால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கூட்டு ஒருங்கிணைப்பாளர் கட்டமைப்பைப் பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் சட்டத்தில் நிலைத்திருக்க முடியாது என்று ஓ.பி.எஸ் முகாம் வாதிடுகிறது. செவ்வாய்கிழமை, அதிமுக கூட்டத்தில், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வும், ஓ.பி.எஸ் விசுவாசியுமான பால் மனோஜ் பாண்டியன் மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு வருவதில் உள்ள சட்டச் சிக்கல்களை சுட்டிக்காட்ட முற்பட்டபோது, ​​இபிஎஸ் அவரை புறக்கணித்தார்” என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதனால், ஓ. பன்னீர்செல்வம் கோபமடைந்ததாகவும் பல வட்டாரங்கள் தெரிவித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.