கட்டட இடிப்பு என்பது சட்டப்படி இருக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டோரின் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படுதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதன் விசாரணையில், சட்டத்தை பின்பற்றுவதாகவும், சட்ட விரோதமாக கட்டப்பட்ட வீடுகளை மட்டுமே இடிப்பதாகவும் உத்தர பிரதேச அரசு, தெரிவித்தது.
இதனை அடுத்து, கட்டடங்கள் இடிப்பதற்கு தடை விதிக்கமுடியாது என தெரிவித்த உச்சநீதிமன்றம், 3 நாட்களுக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டது.