இணைய உலகில் பரவும் வீடியோக்கள், பதிவுகள் எப்போதும் அதன் பயனாளர்களை வியக்க வைக்கவோ, அதிர்ச்சியடைய வைக்கவோ, முகம் சுழிக்க வைக்கவோ தவறியதில்லை. சில வீடியோக்களும், பதிவுகளும் நெட்டிசன்களை அசரவைக்கவும் செய்திருக்கின்றன.
அந்த வகையில் ஐதராபாத்தில் நடு ரோட்டில் இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து கொண்டாடி கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கிறது.
ஐதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸ் என்ற சாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் எந்த நாளில் நடந்தது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.
வீடியோவை காண: அந்த வீடியோவில், ஷெர்வானி அணிந்திருந்த இளைஞர்கள் பட்டாளம் ஒன்று அலங்கரிக்கப்பட்ட காரில் வந்து 500 ரூபாய் நோட்டுகளை பணமழையாக வானை நோக்கி தூக்கி எறிவது போல் உள்ளது.
இது திருமண கொண்டாட்டத்தின் போது நடத்தப்படும் பாரத் என்ற நிகழ்வின் அங்கமாக கருதப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை கண்ட நெட்டிசன்கள், உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கும் போது, அதை தேவைப்படுபவர்களுக்கு கொடுங்கள் அல்லது ஆதரவற்றோருக்காக இயங்கும் இல்லமோ, நிறுவனங்களுக்கோ நன்கொடையாக அளியுங்கள் என பதிவிட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வீடியோ வைரலானதை அடுத்து சார்மினார் காவல்துறையினர் கவனத்திற்கு அந்த நிகழ்வு சென்றுள்ளது. இதனையடுத்து பணத்தை தூக்கி எரிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை குல்சார் ஹவுஸ் சாலையில் இருக்கும் சிசிடிவி காட்சியை கொண்டு கண்டுபிடித்து விசாரணை நடத்தப்படும் என சார்மினார் இன்ஸ்பெக்டர் பி குரு நாயுடு கூறியுள்ளார்.
ALSO READ:
லீவ் கேட்டு மெயில் போட்ட ஊழியர்…நெட்டிசன்ஸின் பாராட்டை பெற்ற அந்த காரணம் என்ன தெரியுமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM