கனடாவில் மதுபோதையில் கார் ஓட்டி 4 பேரை கொன்று 9 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பெண் statutory releaseல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
statutory release என்பது குற்றவாளியின் தண்டனையை முடிவுக்கு கொண்டு வருவது கிடையாது.
மாறாக, குற்றவாளிகள் சமூகத்தில் தங்களுக்கு எஞ்சியிருக்கும் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்தவர்களுக்கு சட்டத்தின்படி statutory release வழங்கப்படுகிறது.
அதன்படி Catherine McKay என்பவர் Chanda மற்றும் Jordan தம்பதி, அவர்களின் குழந்தைகளான Miguire (2),Kamryn (5) ஆகியோரை குடிபோதையில் கார் ஏற்றி கொன்றார்.
இதையடுத்து கடந்த 2016ல் நீதிமன்றத்தால் 9 ஆண்டுகள் சிறை தண்டனையை Catherine பெற்றார்.
மூன்றில் இரண்டு மடங்கு சிறை தண்டனையை அவர் அனுபவித்துள்ள நிலையில் தற்போது statutory release வழங்கப்பட்டுள்ளது.
இதில் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். மேலும் மது, போதை மருந்துகளை எடுத்து கொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு வாகனம் ஓட்ட தடை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.