இந்தியர்கள் உலகம் முழுவதும் இருக்கும் நிலையில் பல லட்சம் இந்தியர்களுக்குத் தற்போது சொந்த நாடாக மாறியுள்ளது கனடா.
அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு இணையாக இந்தியர்கள் வேலை செய்ய அதிகம் விரும்பும் நாடாகக் கனடா விளங்குகிறது அதிலும் குறிப்பாக டெக் மற்றும் மருத்துவப் பிரிவில் இருப்போர் கனடா செல்வது மட்டும் அல்லாமல் அந்த நாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என்பதில் அதிகம் விரும்புகின்றனர்.
10 ஆண்டுகளில் வேற லெவல் வளர்ச்சியினை எட்டலாம்.. 3 நிறுவனங்களை பட்டியல் போடும் நிபுணர்கள்?
இந்த நிலையில் கனடா-வில் வாழும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு குட்நியூஸ் ஒன்றை அளித்துள்ளது.
கனடா அரசு
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு எப்போதும் நீங்காமல் தங்கள் மனதில் இருக்கும் கவலை என்றால் பெற்றோர் உடன் இல்லாமல் இருப்பது தான். அந்த வகையில் கனடா அரசு அளிக்கும் சூப்பர் விசா சேவையை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
சூப்பர் விசா
கனடா நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் சூப்பர் விசா மூலம் தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை அந்நாட்டிற்குள் அழைத்துச் செல்ல முடியும். இந்த விசா பல லட்சம் பேருக்கு பெரிய அளவில் பயன்பட்ட நிலையில் தற்போது இத்திட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட உள்ளது.
ஐந்து ஆண்டு
கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஜூலை 4 ஆம் தேதி முதல், சூப்பர் விசா வைத்திருப்பவர்கள் நாட்டில் ஒரு முறை நுழைந்து ஐந்து ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கூடுதல் சலுகை
இதேபோல் தற்போது சூப்பர் விசா மூலம் அந்நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கும் அரசிடம் அனுமதிப் பெற்றுத் தங்கம் காலத்தை 2 வருடம் வரையில் நீட்டிக்க முடியும் எனக் கனடா அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே சூப்பர் விசா பெற்றுள்ளவர்கள் 7 வருடம் வரையில் அந்நாட்டில் தங்க முடியும்.
17000 சூப்பர் விசா
IRCC தகவல் படி ஒவ்வொரு வருடமும் 17000 சூப்பர் விசா அளிக்கப்படுகிறது, இதில் மல்டி என்டர் விசாவாக இருக்கிறது, 10 வருடம் வரையில் இந்த விசா செலுப்படியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடனா நாட்டில் பல சலுகைகள், வேலைவாய்ப்பு, வருமானம் கொண்டு இருக்கும் காரணத்தால் இந்தியர்கள் அதிகளவில் அந்நாட்டிற்குச் செல்ல விரும்புகின்றனர்.
Canada Govt extending Super Visa; Big jackpot for Indians
Canada Govt extending Super Visa; Big jackpot for Indians கனடா-வில் வாழும் இந்தியர்களுக்குக் குட்நியூஸ்.. அரசின் புதிய அறிவிப்பு..!