மேற்கு மெக்சிகோ நகரம் ஒன்றில், உயிரியல் பூங்கா காப்பாளர் ஒருவர் புலி ஒன்றிற்கு உணவளிக்கும்போது, புலிக்கூண்டுக்குள் கையை விட்டு புலியின் கழுத்தைத் தடவிவிட்டிருக்கிறார்.
அப்போது, Jose de Jesus (23) என்னும் அந்தக் காப்பாளரின் கையை சட்டெனக் கவ்விப் பிடித்த அந்தப் புலி, அவரது கையில் தன் கூர்மையான பற்களை பயங்கரமாகப் பதித்திருக்கிறது.
புலி கடித்துக் குதறிய கையுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Joseஇடம், அவரது கையை அகற்றவேண்டும் என்று மருத்துவர்கள் கூற, Jose அதற்கு ஒப்புதலளிக்க மறுத்திருக்கிறார்.
ஏற்கனவே கடுமையான நீரிழிவுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட Joseஇன் காயங்களும் இரத்தப்போக்கும் அவருக்கு மாரடைப்பை ஏற்படுத்த, பரிதாபமாக பலியாகியிருக்கிறார் அவர்.