குஜராத்: சாலைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள 80 அடி சாலைக்கு பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்னின் பெயர் வைக்கப்படவுள்ளது என காந்தி நகர் மேயர் ஹிதேஷ் மக்வானா தகவல் தெரிவித்தார். வருகிற சனிக்கிழமை, ஹீராபென்-க்கு 100 வயது ஆகவுள்ளதை ஒட்டி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.