தஞ்சை மாவட்டத்தில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அரசுப்பள்ளி தலைமையாசிரியர் உயிரிழந்தார்.
கும்பகோணம் அடுத்த தென்னூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க அரசு பள்ளி தலைமையாசிரியர் ராஜி வந்துள்ளார்.
அப்போது விலை உயர்ந்த இருசக்கரவாகனத்தில் அதிவேகமாக வந்த சிறுவனொருவன் ஆசிரியர் மீது மோதியுள்ளான். இதில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
வளரிளம் பருவத்தினர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது என காவல்துறை எச்சரித்த பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.