சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணி ஒருவரிடம் இருந்து 46 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் நகைக் கடையில் பணியாற்றும் நிலையில், விஜயவாடாவிற்கு விற்கபட்ட நகைக்கான பணத்தை வாங்கிவர அவர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து பினாகினி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த நிலையில், அவரது உடைமைகளை சோதித்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், 46 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.
முறையான ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட அந்த பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.