சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட ஒரு தளமான பன்னூர், மற்ற முன்மொழியப்பட்ட தளமான பரந்தூரை விட சில நன்மைகளைக் கொண்டுள்ளது என்று முன்-சாத்திய அறிக்கை கூறுகிறது.
மற்ற அனைத்து தளங்களை விட பன்னூர் அதிக நன்மைகளை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும், கூடுதல் மதிப்பீட்டிற்கு விரிவான திட்ட அறிக்கை செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், சில சவால்கள் இருந்தாலும் இரண்டு இடங்களும் விமான நிலையத்திற்கு ஏற்றவை என்று அறிக்கை கூறுவதாக தி இந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.
பண்ணூரில், 4,500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் பரந்தூரில் 4,791.29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு இடங்களிலும் இரண்டு ஓடுபாதைகள் மற்றும் வான்வெளிக்கு போதுமான இடம் உள்ளது.
இந்த இரண்டு தளங்களுக்கும் பயணிக்க, ஒரு பயணி எடுக்கும் நேரத்தை அறிக்கை கணக்கிட்டுள்ளது.
“பண்னூருக்கு சாலை வழியாக சராசரி பயண தூரம் 49 கிமீ ஆகும், இங்கு செல்வதற்கு சராசரியாக 1 மணி நேரம் 26 நிமிடங்கள் ஆகும். பரந்தூருக்கு சராசரியாக 73 கி.மீ தூரம் இருக்கும், மேலும் இங்கு பயணிக்க சராசரியாக 1 மணி நேரம் 54 நிமிடங்கள் ஆகும்” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன் 17 அன்று, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா தலைமையிலான மாநிலக் குழுவிற்கு இடையேயான உயர்மட்டக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற உள்ளது, இதில் நகரின் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடம் உட்பட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு இடங்களிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன. உதாரணமாக, பண்ணூரில், தளத்தின் அருகாமையில் கூடுதல் உயர் அழுத்த மின்கம்பங்கள், மொபைல் டவர்கள் மற்றும் மின் கம்பங்கள் உள்ளன.
பரந்தூரில், தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்’ உயர் அழுத்த கோபுரங்கள் மற்றும் மொபைல் டவர்கள்’ காணப்படுகின்றன என்று அறிக்கை கூறுகிறது.
ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இத்தகைய தடைகளின் தாக்கம் இன்னும் அறியப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தளத்திற்கான விரிவான தடை வரம்பு மேற்பரப்பு (OLS) கணக்கெடுப்பை நாங்கள் செய்ய வேண்டும்.
இந்த உயர் அழுத்தக் கோபுரங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் நாம் இதுவரை ஆய்வு செய்த அணுகுமுறை பாதையில் வரவில்லை. ஆனால் விரிவான ஆய்வுக்குப் பிறகு’ தடைகளை வேறு இடங்களுக்கு மாற்றலாம்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
மாநில அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளத்தைப் பொறுத்து, விரிவான OLS கணக்கெடுப்பு, தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் பிற அத்தியாவசிய அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“