ஜூன் 20 தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணீடாதீங்க..!

தங்கம் பத்திர முதலீடு என்பது இன்றைய காலகட்டத்தில் மக்கள் விரும்பும் முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதுவும் இந்த தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதால், இறையாண்மை தன்மை கொண்ட பாதுகாப்பான, இறையாண்மை தன்மை கொண்ட முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆக தங்கப் பத்திரங்கள் என்பது ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாகவும் பார்க்கப்படுகின்றது.

எப்போது தொடக்கம்?

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பல்வேறு சவால்கள் இருந்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் சீரிஸ் ஆனது ஜூன் 20, 2022 அன்று தொடங்கவுள்ளது. ஆக இந்த 5 நாட்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.

இரண்டாவது கட்ட வெளியீடு எப்போது?

இரண்டாவது கட்ட வெளியீடு எப்போது?

நடப்பு நிதியாண்டில் இரண்டாவது கட்ட வெளியீடானது ஆகஸ்ட் 22 – 26, 2022 அன்று வெளியிடப்படவுள்ளது.

2021 – 22ம் நிதியாண்டில் தங்க பத்திரங்கள் 10 தவணைகளில் 12,991 கோடி ரூபாய்(27 டன் ) விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தங்கத்திற்கு மாற்று
 

தங்கத்திற்கு மாற்று

பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக இந்த தங்க பத்திரங்கள் அமையலாம். பொதுவாக பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என்ற ப்ல்வேறு செலவினங்கள் உள்ளன. அதோடு அதில் பாதுகாப்பு குறித்தான பிரச்சனையும் உள்ளது. இவற்றோடு தரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓன்றாக உள்ளது. இதனால் தான் பிசிகல் தங்கமாக அல்லாமல், டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் தங்கம் பத்திரம் எனும் போது, அதில் தரம், பாதுகாப்பு பிரச்சனை இல்லை. அதே செய்கூலி, சேதார பிரச்சனையும் இல்லை.

கவர்ச்சிகரமான முதலீடு

கவர்ச்சிகரமான முதலீடு

ஆரம்பத்தில் தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெறவே, நல்ல முதலீட்டு ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது.

எவ்வளவு வாங்கலாம்?

எவ்வளவு வாங்கலாம்?

ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ளலாம்.

எங்கு வாங்கலாம்?

எங்கு வாங்கலாம்?

இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க டீமேட் கணக்கு தேவைப்படும். வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது வங்கிகளின் டிஜிட்டல் தளத்திலும் மூலம் எளிதாக வாங்கிக் கொள்ளலாம். பல வங்கிகளும் இந்த சேவையினை வழங்கி வருகின்ன.

ஆன்லைனில் வாங்கலாம்

ஆன்லைனில் வாங்கலாம்

டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். ஆக ஆன்லைனில் வாங்குவது சிறந்த ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது.

கடன் பெறலாம்

கடன் பெறலாம்

பிசிகல் தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம். ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு.

வட்டியும் உண்டு

வட்டியும் உண்டு

பொதுவாக தங்கமாக வாங்கினால் அதற்கு வட்டி வருமானம் என்பது கிடையாது. ஆனால் செய்கூலி, சேதாரம் என செலவாக கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.

வரி சலுகை உண்டா?

வரி சலுகை உண்டா?

கேபிட்டல் டேக்ஸ் தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.

பிசிகல் தங்கமாக கிடைக்குமா?

பிசிகல் தங்கமாக கிடைக்குமா?

பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் இது. இந்த தங்க பத்திரங்களுக்கு பதிலாக தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்று? இந்த தங்க பத்திரம் பிசிகல் தங்கத்தினை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். மேலும் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம். ஆக இந்த திட்டத்தில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது. பணமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

எப்படியிருப்பினும் முதல் சீரிஸ்க்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆக விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SGB gold bond latest updates: first tranche to open for subscription on June 20, 2022

Gold bonds are seen as a profitable investment in the long run. The first phase of the current financial year will be released early next week.

Story first published: Thursday, June 16, 2022, 19:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.