பொதுவாக நாம் தினசரி மூன்று வேளை உணவு சாப்பிட்டாலும் இரவு உணவில் கவனமாக இருப்பது அவசியம். காரணம் இரவில் அதிகமாக உணவு எடுத்துக் கொள்வது நிறைய பேர்களின் உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தவறான நேரத்தில் தவறான உணவுகளை சாப்பிடுவது உங்கள் தூக்க சுழற்சியை பாதிக்க வாய்ப்புள்ளது.
இது உங்கள் உடலில் நிறைய கலோரிகளை சேர்க்கும். வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற மூன்று தோஷங்களில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது.
அந்தவகையில் என்னமாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள கூடாது? எவற்றை எடுத்து கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
எடுத்து கொள்ள கூடாதது?
- இரவில் தயிர் சாப்பிடுவது ஆயுர்வேதத்தின் படி ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் இது கப தோஷத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- கேக்குகள், குக்கீகள் அல்லது பிற இனிப்புகள் போன்ற சர்க்கரை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இது உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் தூக்கத்தை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது.
- உப்பு உடலில் நீர் தேக்கத்தை அதிகரிக்கிறது. எனவே உணவில் இருந்து உப்பு நிறைந்த உணவுகளை நீக்குவது பக்கவாதம், இதய நோய்கள், இரத்த அழுத்தம் மற்றும் மரணம் போன்ற அபாயங்களை குறைக்க உதவுகிறது.
- இரவில் சாலட் எடுத்துகொள்வது வயிற்றில் இருக்கும் வாயுவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. செரிமானத்திலும் சிக்கலை உண்டாக்கலாம்.
என்ன எடுத்து கொள்ளலாம்?
- இரவு உணவு உண்ட பிறகு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரை குடித்து வாருங்கள். இது உங்கள் செரிமானத் திற்கு உதவி செய்யும். வயிற்றில் வாயு சேராமல் தடுக்கும்.
- இரவில் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் பாலில் சிட்டிகை மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். மஞ்சள் பாலை குடிப்பது சளி உருவாகுவதை தடுப்பது மட்டுமல்லாமல் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது. இது உங்களுக்கு இரவில் நல்ல தூக்கத்தையும் தர உதவி செய்யும்.
- உணவுகளில் சுவையை அதிகரிக்கப் பயன்படும் இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களை இரவு உணவில் சேருங்கள். இந்த மசாலாப் பொருட்கள் உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. இவை பசியை கட்டுப்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது.
- இரவு உணவுகளில் பருப்பு வகைகள், குயினோவா, ப்ரக்கோலி போன்ற காய்கறி கள் மற்றும் பாலாடைக்கட்டி போன்றவற்றை சாப்பிடுங்கள். அதிக புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது கொழுப்புக்களை எரிக்க உதவுகிறது.