சென்னை: தமிழ்நாட்டில் சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளை கண்டறிந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மகளிருக்கான கட்டணமில்லா அனைத்துப் பேருந்துகளையும் ஒரே வண்ணத்தின் கீழ் கொண்டு வர சென்னையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக செயல்பாடு குறித்த கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.