புகழ்பெற்ற திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளவரான கனடா நடிகரான ரியான் கிரந்தம் (24) என்பவர், 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் 31-ம் தேதி, வீட்டில் பியானோ வாசித்துக்கொண்டிருந்த தன் தாய் பார்பரா வெயிட் (64) என்பவரை, பின்னால் இருந்து தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் மூன்று துப்பாக்கிகள், குண்டுகள், பெட்ரோல் குண்டுகள் முதலான ஆயுதங்களுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கொல்லும் நோக்கத்துடன், ரியான் அவரது வீட்டை நோக்கிப் புறப்பட்டுள்ளார். பின்னர் தானாகவே போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் முன் விளக்கம் அளித்த ரியான், தான் தன் தாயைக் கொடுமைப்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், அவர் தன் கையால் அனுபவிக்கப்போகும் கொடுமைகளிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காகவே அவரைத் தான் சுட்டுக் கொன்றதாகவும் விளக்கமளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.