ஐதராபாத்: நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த அகில் என்பவர் ஐதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவதும், இஸ்லாமியர் ஒருவர் மாட்டை கொண்டு சென்றபோது தாக்கப்பட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சமீபத்தில் சாய்பல்லவி கூறியிருந்தது இணையத்தில் பேசுபொருளானது.