“நான்தான் அம்மாவைக் கொன்றேன்; மரண தண்டனை ஏற்கத் தயார்!" – 16 வயது சிறுவன் பேச்சால் அதிர்ந்த நீதிபதி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் மொபைல் வீடியோ கேம் விளையாடி வந்திருக்கிறார். மொபைல் கேம் மோகத்துக்கு அடிமையான அந்த சிறுவனை கடந்த ஜூன் 4-ம் தேதி அவருடைய தாய் அடிக்கடி போனில் கேம் விளையாடக் கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன் தன் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தாயைச் சுட்டுக் கொலைசெய்திருக்கிறார். ஆரம்பத்தில் பொய் சொன்ன சிறுவன் அதன் பிறகு காவல்துறை விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

துப்பாக்கிச் சூடு

அதைத் தொடர்ந்து, காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதிராகக் கொலைப் பிரிவு (302)-ல் வழக்கு பதிவு செய்து சிறார் கூர்நோக்குப் பள்ளிக்கு அவனை அனுப்பிவைத்தது. இந்த நிலையில், அந்த சிறுவன் குறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் நீதிபதியிடம் அழைத்துச் செல்லப்பட்ட போது, “நான்தான் என் தாயைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன். அதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” எனத் தனது செயலுக்கு எந்த வருத்தமும் இல்லாமல் கூறியதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி அவனை சிறார் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

ஆனால் சிறுவன், சிறார் சிறையில் உள்ள சிறார்களிடம் தனது கதையை விவரிப்பதாகவும், தன் தாயைக் கொன்றதை பற்றி கவலையே கொள்ளவில்லை என்றும் சிறார் காப்பகத்தின் பணியாளர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். இந்த நிலையில், சிறுவனின் சகோதரி “கொலையைச் சிறுவன் செய்யவில்லை. தனது தாயின் மீது கொண்ட வெறுப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி கொலையைத் தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறான்.

காவல்துறை

ஆனால் உண்மையில் கொலையை வேறு யாரோ செய்துள்ளனர். ஏனென்றால், கொலை நடந்த அன்று அவன் என்னை அவசரமாக ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு அதிகாலை 2 மணியளவில் ஒருவரைச் சந்திக்க வெளியே சென்றான். ஆனால், இந்த விவரங்களை காவல்துறை ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே, இதுவரை காவல்துறை விசாரணையில் திருப்தி இல்லை” எனக் குற்றம்சுமத்தியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.