ஆப்டிகல் இல்யூஷன் ஒரு புயலைப் போல இணையத்தையும் சமூக ஊடகங்களையும் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் பார்ப்பவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து வருகின்றனர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பாரவையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து பார்ப்பவர்களின் ஆளுமையைக் குறிப்பிடுகிறது. இது நெட்டிசன்களை முடிவில்லாத ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு பயனுள்ள உளவியல் கருவி. அது உங்கள் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நம்பமுடியாத நுண்ணறிவுகளைத் தருகிறது. தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தி மனதை மருளச் செய்பவை.
இது போன்ற ஓவியங்கள் மற்றும் கலைப் படைப்புகள், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கும், தொடர்பில்லாத நிகழ்வுகள் அல்லது படங்களுக்கிடையில் ஒரு வடிவத்தை உருவாக்கிப் பார்க்கும் மனித மனம் குறித்து விளையாடுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் உள்ள பெண்ணை நீங்கள் கண்டுபிடித்தால், உங்கள் ஆளுமையைத் தெரி்ந்துகொள்ளலாம் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் அடைவீர்கள். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன், படம் மூலம் நீங்கள் ஒரு மனிதன் என்பதை நிரூபிக்கலாம்.
ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் முறையில் இணையத்தில், நீங்கள் ரோபோவா இல்லையா என்று கண்டுபிடிக்கும் டெஸ்ட்களை பார்த்திருப்பீர்கள். அதுபோல, நீங்கள் ரோபோவா இல்லையா என்பதை இந்த ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் கண்டுபிடிக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உன்னிப்பாகக் கவனித்து, இதில் உள்ள பெண்ணைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள் மிகவும் எளிமையான சோதனைதான். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
இந்த ஓவியத்தில் முதுகைக் காட்டியபடி ஒரு பெண்ணின் உருவம் இருக்கிறது. அந்த பெண் தொப்பி அணிந்து, இரண்டு மலைகளைக் கண்டும் காணாதது போல், இந்த படத்தில் இருக்கும் ஆணின் கண்களுக்கு கீழே அமர்ந்து இருக்கிறாள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“