SL vs AUS 2022: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முன்னதாக நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்கிற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இத்தொடருக்கான முதலாவது ஒருநாள் ஆட்டம் கண்டியில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிலையில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் பதும் நிஸ்ஸங்க (55), தனுஷ்க குணதிலக்க (56), குசல் மெண்டிஸ் (86) ஆகிய வீரர்கள் அரைசதம் அடித்தனர். சரித் அசலங்கா – வனிந்து ஹசரங்க 37 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மார்னஸ் லாபுசாக்னே, ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 301 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 80 ரன்கள் குவித்தார். அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் 53 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஆரோன் பின்ச் –
மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் DLS முறைப்படி ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 51 பந்துகளில் 6 சிக்ஸர் 6 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆஷ்டன் அகாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டேவிட் வார்னர்…
கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தும் ரசிகர்களை குஷிப்படுத்துவராக டேவிட் வார்னர் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த வார்னர் ஆச்சரியமூட்டும் ஒரு கேட்ச்சை பிடித்து மிரட்டினார். அவர் இப்படி தாவிப்பிடிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்காத பந்துவீசிய ஆஷ்டன் அகார் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
37வயதான டேவிட் வார்னர் கண்மூடித்தனமாக ஒரு கேட்ச்சை இப்படி தாவி பிடித்துள்ள பார்ப்போர் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்து வருகிறது. அவர் கேட்ச் பிடிக்கும் வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிமாக பகிரப்பட்டு சமூக வலைதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Brilliant catch by David Warner ♥️#SLvAUS pic.twitter.com/PBC3xV5P6D
— Umair Khan (@UmairKhWorld) June 14, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil