புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு, கடந்த பிப்., மாதத்திற்கு பிறகு தற்போது 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 8,822 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேர் பாதிக்கப்பட்டனர். இது, 38.4 சதவீதம் அதிகமாகும்.
தற்போது 53,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,624 பேர் குணமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,74,712 ஆனது.
தினசரி தொற்று விகிதம் 2.35 சதவீதமாகவும், வாரந்திர தொற்று விகிதம் 2.38 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் குணமடைபவர்களின் விகிதம் 98.65 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் காரணமாக 11 பேர் இறந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,803 ஆனது.
நேற்று 15,21,942 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 195.67 கோடி ஆனது.
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு, கடந்த பிப்., மாதத்திற்கு பிறகு தற்போது 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 8,822 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,213 பேர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.