கடந்த ஆண்டில் இந்தியாவில் 15.4 ஜிகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்னழுத்த திறனுக்கான உலகின் மூன்றாவது பெரிய சந்தையாகவும் இந்தியா உயர்ந்துள்ளது . கொரோனா பொதுமுடக்கம் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகத்தில் தேக்கநிலை இருந்து வந்தது.
தனியார் சோலார் மின் திட்டங்களுக்கு மானியம் வழங்குவதற்காக 18,100 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க இந்திய அரசின் முயற்சிகள் தொடர்ந்து பலனைத் தருவதாக குளோபல் ஸ்டேட்டஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.