போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஆர்வமாக இருப்பதாக அந்த நாட்டின் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது முடிவில்லாத தன்மையில் 100 நாள்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், உக்ரைனில் கிழக்கு பகுதியான டான்பாஸை முழுமையாக கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதிலும் டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் ரஷ்ய வீரர்களின் தற்போதைய முயற்சிகளில் மூலோபாய நகரான சிவெரோடோனெட்ஸ்கை தாக்குதலுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
The Russian Federation suddenly wanted truce talks with Ukraine.
“Russia is interested in reaching political and diplomatic agreements as soon as possible, which would allow the cessation of hostilities. ” said Russian Security Council Secretary Nikolai Patrushev.
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 16, 2022
அந்தவகையில், சிவெரோடோனெட்ஸ்க் நகரை பிற உக்ரைனிய நகரங்களுடன் இணைக்கும் மூன்று தரைப்பாலங்களையும் ரஷ்யப் படைகள் முழுவதுமாக தகர்த்துள்ள நிலையில், பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் உடனடியாக சரணடையுமாறு எச்சரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனில் போர் தாக்குதலை தீவிரமாக நடத்திவரும் ரஷ்யா, போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷெவ் தெரிவித்துள்ள கருத்தில், கூடிய விரைவில் அரசியல் மற்றும் இராஜதந்திர ஒப்பந்தங்களை உக்ரைனுடன் மேற்கொள்ள ரஷ்யா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பொதுமக்களை குறிவைக்கும் தாலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் நிலை என்ன?
அத்துடன் இந்த பேச்சுவார்த்தையானது இருநாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல்களை நிறுத்த அனுமதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.