வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்: ராகுலுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது, கைது செய்ய முயன்ற போலீசின் சட்டையை முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி பிடித்து இழுத்தார்.
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வாங்கியதில் நடந்த மோசடி குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறையினர் நேற்றும் விசாரணை நடத்தினர். நாளையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ராகுலுக்கு சம்மன் அனுப்பியதற்கும், விசாரணை நடத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு , தலைநகரங்களில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அப்போது, போராட்ட களத்தில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, போலீஸ் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்தார். இதனையடுத்து, அங்கிருந்த பெண் போலீசார், ரேணுகா சவுத்ரியை பிடித்து வேனிற்கு இழுத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Advertisement