கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து (வயது 48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ்(22) என்ற மகன் உள்ளார்.
இத்தகைய நிலையில், மனோஜ் தனது அம்மாவுடன் கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது முன்னால் சென்ற கார் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் எதிர்பாராதவிதமாக மனோஜின் இரு சக்கர வாகனம் காரின் பின்பகுதியில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மனோஜ் மற்றும் முத்து ஆகிய 2 பேரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்த சேதுபதி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.