முகக்கவசம், சமூக இடைவெளி, பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: முகக்கவசம், சமூக இடைவெளி,  பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2 டோஸ் எடுத்துக்கொண்ட 18வயது இளம்பெண் கொரோனாவுக்கு பலியான நிலையில், அமைச்சர் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல்  4 மடங்கு அதிகரித்துள்ளது. 13 மாவட்டங்களில் தொற்று பரவி உள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும் 441 பேர் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், 3 மதத்துக்கு பிறகு நேற்று ஒரு இளம்பெண் உயிரிழந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  பொதுமக்கள் அனைவரும் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் , இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது,  “உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில்தான் கொரோனா குறைவாகத்தான் பரவுகிறது முதல்வரின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக,கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என்று கூறியவர்,  கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், நேற்று தஞ்சை சேர்ந்த 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

எனவே,பொதுமக்கள் அனைவரும் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியுமாறும் வலியுறுத்தியதுடன்,  கொரோனா 2-வது தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும், பூஸ்டர் டோஸ் எடுத்தவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து தப்ப முடியும்  என்றும் கூறினார்.

மேலும், காய்ச்சல், சளி உள்பட  எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.