மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை முற்றுகையிட்டு பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தலைவர் ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். விவசாயிகளின் போராட்டத்திற்கு முன் அனுமதி பெறாத காரணத்தால் காவல்துறையினர் விவசாயிகளை உடனடியாக அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ச்சியாக அவர்கள் வேளாண்மை அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 4 பேர் மட்டும் மேலாண்மை அலுவலகத்தில் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
image
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், மத்திய அரசு கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் ஆணையக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது; இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹெல்டர் இன்று மற்றும் நாளை டெல்டா பகுதிகளை நேரில் சென்று பார்வையிட இருப்பதால் அவரை இன்று சந்தித்து பேச இயலவில்லை எனவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.