மோடியின் தாய்க்கு ஜூன் 18ல் 100 வயது| Dinamalar

ஆமதாபாத்: பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென்னுக்கு நாளை மறுதினம் 99 வயது முடிந்து 100வது வயது பிறக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென், குஜராத் மாநிலம். காந்திநகரில் வசிக்கிறார். கடந்த 1923ம் வருடம் ஜூன் 18ம் தேதி பிறந்த ஹீரா பென்னுக்கு, நாளை மறுதினம் 99 வயது முடிந்து 100 வயது பிறக்கிறது. இதையடுத்து, குஜராத்துக்கு நாளை மறுதினம் செல்லும் பிரதமர் மோடி, தாயை சந்தித்து ஆசி பெறுகிறார். மேலும், மோடியின் சகோதரர்கள், தாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆமதாபாதில் உள்ள ஜகன்நாதர் கோவிலில் சிறப்பு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதிலும், மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.