யாருக்கு அதிக சம்பள உயர்வு.. WFH-ல் இருப்பவர்களுக்கா அல்லது ஆபீஸ் வருபவர்களுக்கா?

இந்திய நிறுவனங்களில் அப்ரைசல் போடும் நேரம் வந்துள்ள இதேவேளையில் சந்தையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு ஊழியர்களும் இந்தச் சம்பள உயர்வை அதிகளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால் இதேவேளையில் முக்கியமான கேள்வியும் ஊழியர்கள் மத்தியில் எழுத்துள்ளது. யாருக்கு அதிகச் சம்பள உயர்வு கிடைக்கும் வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்காக அல்லது ஆபீஸ்-க்கு வந்து பணியாற்றுபவர்களுக்காக என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு நிறுவனங்களிடம் இருந்து வரும் பதில் என்ன தெரியுமா..?

இந்திய பெண்களுக்கு இனி ஈஸியா வேலை கிடைக்கும்: ஐநா-லிங்க்ட்இன் புதிய திட்டம்

அப்ரைசல்

அப்ரைசல்

இந்தியாவில் முதல் முறையாக வொர்க் பர்ம் ஹோம், ஹைப்ரிட் வொர்க் பரம் ஹோம் மாடல் நடைமுறைக்கு வந்த பின்பு ஊழியர்களுக்கான பர்பாமென்ஸ் அப்ரைசல் நடக்கிறது. இதனால் அனைத்து மட்ட ஊழியர்கள் மத்தியிலும் அப்ரைசல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வொர்க் பரம் ஹோம்

வொர்க் பரம் ஹோம்

இதற்கு முக்கியக் காரணம், வொர்க் பரம் ஹோம் என்பது தற்போது இந்தியாவில் நிரந்தமாகியுள்ளதால் இந்த வருட அப்ரைசல் அடிப்படையில் தான் இனி ஒவ்வொரு வருடமும் நடக்கும்.

 ஐடி, டெக், டிஜிட்டல் சேவை ஊழியர்கள்
 

ஐடி, டெக், டிஜிட்டல் சேவை ஊழியர்கள்

தற்போது ஐடி, டெக், டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் இருக்கும் முக்கியமான கேள்வியும், சந்தேகமும் இதுதான். வீட்டி இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குக் குறைவான சம்பள உயர்வும், பதவி உயர்வு அளிக்கப்படாமல் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இதேவேளையில் அலுவலகம் வந்து பணியாற்றுவோருக்குக் கூடுதலான சம்பள உயர்வும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேனேஜர் மனசு வைத்தால்..

மேனேஜர் மனசு வைத்தால்..

மேனேஜர் முன்பு பணியாற்றும் போது தெரிந்தோ, தெரியாமலோ கூடுதலான முன்னுரிமை அந்த ஊழியர்களுக்குத் தான் அளிக்கப்படும், மேலும் ஊழியர் அதிகளவிலான நேரம் அலுவலகம் வந்து பணியாற்றும் போதும், தொடர்ந்து நேரடியாக மேனேஜர் உடன் தொடர்பில் இருப்பதும், மீட்டிங்-கில் காணப்படுவது மூலம் ஒரு நிறுவனம் அல்லது அணியில் தலைவர் முன்னுரிமை தாண்டி முக்கியத்துவத்தை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் ஊழியர்களுக்குத் தான் அளிக்கப்படும் என மெர்சர் கண்சல்டிங் நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் கூறியுள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

ஆனால் இதேவேளையில் பானாசோனிக் இந்தியா, மைக்ரோசாப்ட், ஈடெல்விஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்களின் உயர் தலைவர்கள் கூறுகையில் அப்ரைசலின் போது அவர்களின் பணி, திறன் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும், வீட்டில் இருந்து பணியாற்றுவதை முக்கியக் காரணியாகக் கொண்டு அப்ரைசல் செய்யப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளனர்.

புதிய அச்சம்..

புதிய அச்சம்..

ஏற்கனவே எவ்வளவு சம்பளம் வரும் என்ற அச்சத்தில் இருப்பவர்களுக்குத் தற்போது புதிதாக ஆபீஸ் வந்து பணியாற்றுபவர்களுக்குக் கூடுதலான சம்பள உயர்வும், வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்குக் குறைவான சம்பளமும் பெறுவார்கள் எனக் கேள்வி பலரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஐடி ஊழியர்கள் மத்தியில் இந்தக் கேள்வி அதிகப்படியானவர்கள் மத்தியில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Who will get better appraisal this year? WFH employees or WFO employees; Big debate going on

Who will get better appraisal this year? WFH employees or WFO employees; Big debate going on யாருக்கு அதிகச் சம்பள உயர்வு.. WFHல் இருப்பவர்களுக்காக அல்லது ஆபீஸ் வருபவர்களுக்காக?

Story first published: Thursday, June 16, 2022, 12:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.