ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்த விடயத்தில் கனடாவின் பெயரும் அடிபடுகிறது.
அதாவது, ஜேர்மனிக்கு எரிவாயு வழங்கும் Gazprom எரிவாயு நிறுவனம், திடீரென எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டது.
குழாய் வழியாக ஜேர்மனிக்கு எரிவாயு அனுப்பும் இயந்திரங்களில் ஒன்று பழுதாகிவிட்டதாகவும், அந்த இயந்திரத்தை ஜேர்மனியின் Siemens Energyநிறுவனத்திடம் கொடுத்துள்ளதாகவும், ஆனால், அந்நிறுவனம் அந்த இயந்திரத்தை சரியான நேரத்தில் சரி செய்து திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் அதனால்தான் எரிவாயுவின் அளவைக் குறைக்கவேண்டிய நிலை உருவாகிவிட்டது என்றும் Gazprom நிறுவனம் கூறியுள்ளது.
ஜேர்மன் நிறுவனமான Siemens Energyயோ, தாங்கள் அந்த இயந்திரத்தை கனடாவின் மொன்றியலிலுள்ள ஒரு சிறப்பு தொழிற்சாலைக்கு அனுப்பியதாகவும், கனடா ரஷ்யா மீது தடைகள் விதித்துள்ளதால் அந்த இயந்திரத்தை கனடாவிடமிருந்து திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி ரஷ்யாவை கைநீட்ட, ரஷ்யா பதிலுக்கு ஜேர்மனியை கைநீட்ட, ஜேர்மனி கனடாவை கைநீட்ட, ஆக மொத்தத்தில் ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயுவில் ரஷ்யா கைவைத்துவிட்டது என்பது மட்டும் உண்மை.