ஒரு நபர் ஒரு நிதியாண்டில் ரூ.25,000 டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் வாங்கினால் அந்த நபர் வருமான வரி ரிட்டன் தாக்கல் வேண்டுமென மத்திய அரசு புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் ஒரு நடவடிக்கையாக ரூ.25,000 அல்லது அதற்கு மேல் டிடிஎஸ் பெற்றால் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு நபரின் வருமானத்தில் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டவுடன் அல்லது அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்ததும் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் பணம் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் என்பது தெரிந்ததே.
டிடிஎஸ் – டிசிஎஸ்
இந்த நிலையில் ஒருவர் ஒரு நிதியாண்டில் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் ரூ.25,000க்கு மேல் பெற்றால் அந்த நபர் கண்டிப்பாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவே மூத்த குடிமகன் என்றால் ரு.50,000 அல்லது அதற்கு மேல் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் பெற்றால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்
இந்த நடைமுறை நடப்பு நிதி ஆண்டில் அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக வருமான வரி தாக்கல் செய்யும் நபர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.50 லட்சம் டெபாசிட்
மேலும் ஒரு தனிநபர் வங்கி கணக்கில் ரூபாய் 50 லட்சம் அல்லது அதற்கு மேலாக ஒரு நிதியாண்டில் டெபாசிட் செய்தால் அந்த நபரும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சென்றாலும் வரி
அதேபோல் ஒரு நபர் வெளிநாட்டு சுற்றுலா சென்று இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்தாலும் வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபர் தன்னுடைய வீட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மின்சார கட்டணம் செலுத்தினால், அந்த நபரும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் குறைவாக இருப்பதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கம்போல் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ITR filing must if TDS, TCS is Rs 25,000 or more
ITR filing must if TDS, TCS is Rs 25,000 or more | ரூ.25,000 வாங்கினாலே வரி கட்டணும்: மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு!