ரூ.500 போட்டா 2500 ரூவா கிடைக்குதா.. ஏடிஎம்-மில் குவிந்த மக்கள்.. மிச்சம் மீதி இருக்கா?

ஏடிஎம்மில் 500 ரூபாய் பணம் எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் உங்களுக்கு 2500 ரூபாய் கிடைக்கிறது என்றால் உங்களது உணர்வு எப்படியிருக்கும். அப்படி தான் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அங்குள்ள ஒரு ஏடிஎம் மையம்.

10 ஆண்டுகளில் வேற லெவல் வளர்ச்சியினை எட்டலாம்.. 3 நிறுவனங்களை பட்டியல் போடும் நிபுணர்கள்?

நாக்பூரை சேர்ந்த நபர் ஒருவர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

ரூ.500-க்கு 2500

ரூ.500-க்கு 2500

அங்கு 500 ரூபாய் எடுத்தவருக்கு, 2500 ரூபாய் கிடைத்துள்ளது. அதை பார்த்த நபர் இன்னொரு 500 ரூபாயினை பதிவிட்டுள்ளார். அவருக்கு மீண்டும் ஐந்து 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கபர்கேடா நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரத்தில் தான் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது.

 

காட்டுத் தீ போல பரவிய செய்தி

காட்டுத் தீ போல பரவிய செய்தி

இந்த செய்தியானது அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியதை அடுத்து, ஏடிஎம்-ல் இருந்து தான் பணம் எடுப்பேன் என பலர் அந்த ஏடிஎம்க்கு குவிந்தனர். இதன் காரணமாக ஏடிஎம் வாசலில் கூட்டம் வரிசை கட்ட தொடங்கியுள்ளது.

இந்த செய்தி எப்படியோ காவல்துறையினருக்கு போகவே, காவல் துறையினர் விரைந்து வந்து ஏடிஎம்மினை மூடினர். அதன் பின்னரே வங்கிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எப்படி 5 நோட்டுகள்
 

எப்படி 5 நோட்டுகள்

அதன் பிறகே ஏடிஎம்-மில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாகவே கூடுதலாக பணம் வெளியாகியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுவரையில் இது குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

 ஆங்காங்கே நடக்கும் செயல்கள் தான்?

ஆங்காங்கே நடக்கும் செயல்கள் தான்?

பொதுவாக இதுபோன்ற சிறு சிறு தவறுகளினால் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதாவது நடைபெறுவதுண்டு. எது எப்படியோ அப்போதைக்கு மக்கள் ஹேப்பி அண்ணாச்சி.

இதுபோன்ற தவறுகள் நடக்கும்பட்சத்தில் அதனை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது நல்லது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The person who took 500 rupees at the ATM got 2500 rupees

A person from Nagpur went to the ATM center to withdraw money at a bank ATM. The person who took 500 rupees at the ATM got 2500 rupees

Story first published: Thursday, June 16, 2022, 15:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.