புதுடில்லி-விமான எரிபொருள் வரியை குறைக்கும்படி ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் துறையை சேர்ந்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்: கடந்த, 2020ல் மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன்படி, 40 நிமிட விமான பயணத்திற்கு, வரி நீங்கலாக குறைந்தபட்சம், 2,900 ரூபாய்; அதிகபட்சம், 8,800 ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என, உத்தரவிட்டது. ஆனால், 2021 ஜூன் முதல் தற்போது வரை விமான எரிபொருள் விலை, 120 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.
இதனால், விமான நிறுவனங்களின் செலவினம் அதிகரித்துஉள்ளது. எனவே மத்திய அரசு விமான எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும். இழப்பில் இருந்து விமான சேவை நிறுவனங்களை காக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி-விமான எரிபொருள் வரியை குறைக்கும்படி ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் துறையை சேர்ந்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் தலைவர் அஜய்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.